கேரளாவில் இருந்து கோழிகளை ஏற்றி வந்த லாரி தடுத்து நிறுத்தம் : திருப்பி அனுப்பிய தமிழக போலீசார்
5 September 2020, 4:19 pmகேரளாவில் இருந்து நோய்வாய்ப்பட்ட கோழிகளை தமிழகத்திற்கு ஏற்ற வந்த லாரியை தமிழக போலீசார் திருப்பி அனுப்பினர்.
கேரள மாநிலத்தில் இருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு இரண்டு லாரிகள் தமிழகத்திற்குள் வருவதாக தென்காசி போலீசாருக்க தகவல் கிடைத்தது. இதையடுத்து கோழிகளை ஏற்றி வந்த லாரிகளை புளியரை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சுமார் 10 ஆயிரம் நோய்வாய்ப்பட்ட கோழிகளை ஏற்ற வந்த இரண்மு லாரிகளை பிடித்து தமிழக போலீசார் விசாரணை செய்ததில், நோய்வாய்ப்பட்ட கோழிகளை கோவைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
மேலும் உரிய ஆணவமின்றி, எந்த மருத்துவ சான்றும் இன்றி ஏற்றி வந்ததும் தெரியவந்தது, இதையடுத்து தமிழக போலீசார் இரண்டு லாரிகளையும் திருப்பி கேரள மாநிலம் ஆரியங்காவு சோதனைச்சாவடி வரை கொண்டு விட்டு வந்தனர்.
0
0