“கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்படறது தெரு நாய்கள் தான்…! மொதல்ல “அத” பண்ணுங்க…!” – மனிதநேயமிக்க டிஜிபியின் அறிவுரை…!

26 March 2020, 7:04 pm
Quick Share

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதிவரை ஊடரங்கு சட்டத்தை நேற்றிலிருந்து பிரதமர் மோடியின் தலைமையில் அமல் படுத்தப்பட்டது. இந்தியாவில் சுயதனிமைப்படுத்துதலை கைப்பிடித்து விட்டால் 62 சதவீதம் பாதிப்பை எளிதில் தடுத்துவிடலாமென்று ICMR வலியுறுத்தி வருகிறது.


ஆனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் சென்றுவிட்டால் தெருநாய்களின் கதியென்ன…? மக்கள் போடும் குப்பைகளை மட்டும் உண்டு தனது வாழ்க்கையை நடத்தும் அவைகள் தற்போது வீதிகளெங்கும் தனியாக பசியாக தெரிந்துக்கொண்டு வருகின்றன. அவைகளில் ஏதேனும் ஒன்றிற்கு கொரோனா வந்து இறந்துவிட்டால் பாதிப்பு கொடூரமாக இருக்கும்.


இதனை அறிந்த சென்னை மாநகரத்து டிஜிபி சைலேந்திர பாபு, நகரத்திலுள்ள 344 தீயணைப்பு படையினரை வரவழைத்து “கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்படறது தெரு நாய்கள் தான்…! மொதல்ல அதுங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு பண்ணுங்க…!” என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டு அதற்கான தொகையையும் அரசிடம் பரிந்துரை செய்துள்ளார்.

Leave a Reply