கோவையில் விஷம் வைத்து கொல்லப்படும் தெருநாய்கள் : நடவடிக்கை எடுக்க கோரி புகார்!!
Author: Udayachandran RadhaKrishnan24 August 2021, 3:27 pm
கோவை : சிங்காநல்லூர் பகுதியில் தொடர்ந்து மர்மமான முறையில் நாய்கள் உயிரிழந்து வருவதாகவும் அதற்கு ஒரு சிலர் விஷம் வைத்து கொன்று விடுவதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை சிங்காநல்லூர் நேதாஜி வீதி டி.எச்.என்.பி குடியிருப்பு பகுதிக்கு வசிக்கக்கூடிய அரவிந்தன் என்பவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் மனுவை ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் தொடர்ந்து நாய்களுக்கு விஷம் வைத்து கொன்று விடும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இன்று மூன்று நாய்கள் திடீரென உயிரிழந்துள்ளது.
ஒரு சில நாய்கள் மிகவும் சோர்வுடன் காணப்படுகிறது. அதனால் காவல்துறையினர் தலையிட்டு நாய்களை விஷம் வைத்துக் கொள்ளக்கூடிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
0
0