வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை : கோவை எஸ்.பி எச்சரிக்கை!!

2 July 2021, 11:40 am
Cbe SP Warns - Updatenews360
Quick Share

கோவை : நாட்டு வெடிகுண்டு மூலம் வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடி க்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் எச்சரித்து உள்ளார் .

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : கோவை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் நாட்டு வெடிகுண்டு களை ( அவுட்டுக்காய் ) பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடுவது தடுக்கப்பட்டு வருகிறது .

கடந்த 2020 ம் ஆண்டு மற்றும் நடப்பாண்டில் ( 2021 ) அன்னூர் , பெரியநாயக்கன் பாளையம் , காரமடை மற்றும் துடியலூர் போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.அத்துடன் அது தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 14 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அவுட்டுகாய் தயாரிப்பது அதைப் பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடுவதும் சட்டப்படி குற்றம் ஆகும் எனவே அதுபோன்று செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .

இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் 9498181212 என்ற எண்ணிற்கும் , 77081 00100 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் . தகவல் தெரிவிப்பவர் களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப் படும் . இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது .

கோவை மண்டல கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் ஜ.அன்வர்தீன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட வன அலுவலர் டி.வெங்கடேஷ் கடந்த ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் அவுட் காய் தயாரிப்பது அதை பயன்படுத்த வன விலங்குகளை வேட்டையாடுமவதும் தடுக்கும் வகைகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 111

0

0