உயிர் காக்கும் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை : சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

1 August 2020, 5:50 pm
Kanchi Health Secretary Warn - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : உயிர் காக்கும் மருந்துகளை கள்ள சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் கண்டறியும் முகாம் மற்றும் நடமாடும் பரிசோதனை வாகனம் , அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார் .

பின்னர் செய்தியாளரிடம் கூறியதாவது, அரசு ஆணையை பின்பற்றி பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள் . அரசு மருத்துவமனை பொறுத்தவரை அனைத்து உயர்தர மருந்துகள் தற்போது கையிருப்பு உள்ளன.

தனியார் மருத்துவமனையில் உயிர் காக்கும் உயர் தர மருந்துகள் ஏஜெண்டுகள் மூலம் கூடுதலாக விற்பனை செய்யப்படுவது குறித்து தகவல் தெரிந்தால் கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கள்ளச் சந்தைகளில் உயிர் காக்கும் உயர் தர மருந்துகள் விற்பனை செய்த ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . மேலும் பல கள்ள சந்தைகளில் மருந்து விற்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள பிரத்யேக குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

டோசிலிசம்ப், ரெமடிச்விர்விர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை கள்ள சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . தனியார் மருத்துவமனைகளில் உயர் தர மருந்துகள் தேவைப்படும் பட்சத்தில் அரசு மூலமாக அவர்களுக்கு வழங்குவதற்கு வழிமுறைகள் மேற்கொள்ளப்படும். கிராமப்புற பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

Views: - 0

0

0