‘என் பெற்றோர் என்னை யாருக்கும் தத்துக்கொடுக்கவில்லை‘ : ஆசிரியை சபரிமாலாவுக்கு மாணவர் சவுக்கடி!!

20 October 2020, 10:42 am
Sabari Mala Student - Updatenews360
Quick Share

தேனி : நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக என் பெற்றோர் யாருக்கும் என்னை தத்து கொடுக்கவில்லை என மாணவன் ஜீவித் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வார்பட்டி அரசு மாதிரி பள்ளியல் இரண்டு வருடத்திற்கு முன்பு 12ஆம் வகுப்பு பயின்ற ஜீவித் குமார், கடந்த வருடம் நீட் தேர்வு எழுதி 193 மதிப்பெண் பெற்றார்.

இந்த நிலையில் மருத்துவக் கல்லூரியில் சேர முடியைத நிலையல் தனியார் நீட் பயிற்சி பள்ளியில் பயின்று மீண்டும் நீட் தேர்வு எழுதி தற்போது 664 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் 1823வது இடம் பிடித்துள்ளார்.

அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களில் அதில இந்திய அளவில் முதல் மாணவனான சாதனை புரிந்த ஜீவித் குமார், தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதனிடையே ஆசிரியை சபரிமாலா, தனது முகநூல் பக்கத்தில் மாணவர் ஜீவித் குமாரை தத்தெடுத்து செலவு செய்து படிக்க வைத்தாக கூறியிருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது. தனியார் நீட் பயிற்சி பள்ளியில் படித்த ஜீவித் குமாரை, சபரி மாலா தத்தெடுத்து படிக்க வைத்தாக கூறியிருந்ததை சமூக வலைதளங்களில் அறிந்த ஜீவித் குமார் தனது முகநூலில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

அந்த வீடியோவில், என் தந்தை ஆடு மேய்ப்பவர் தாய் 100 நாள் வேலை திட்டத்தில் கூலி வேலைக்கு செல்பவர்கள். இருந்தாலும் நான் நீட் தேர்வில் வெற்றி பெற இருவரும் ஊக்கம் அளித்தனர், அதே போல என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் பெரிதும் உதவினர்.

மேலும் ஆசிரியை சபரிமாலா என்னை அரசியல் கட்சியனர் மிரட்டியதாகவும், நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு என்னை என் பெற்றோர் தத்து கொடுத்தாக பதிவிட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். என்னை யாரும் மிரட்டவில்லை, நீட் தேர்வு முடிவு வந்தவுடன் சில அரசியல் கட்சிகள் என்னை சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.

என்னை பற்றி தவறாக சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என ஆசிரியை சபரிமாலாவுக்கு இந்த வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ள ஜீவித் குமார், அரசு கல்லூரியில் நிச்சயமாக இடம் கிடைக்கும் என நம்புவதாகவும், எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஆசிரியர் பதவியை உதறி தள்ளிய ஆசிரியை சபரிமாலா, நீட் தேர்வில் வெற்றி பெற ஏழை மாணவர் ஜீவித் குமாரை தத்தெடுத்தாக கூறியிருந்த நிலையில், மாணவன் அதை திட்டவட்டமாக மறுத்து வீடியோ வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 34

0

0