செல்பி மோகம்: இன்ஜின் மீது ஏறி மின் ஒயரை பிடித்த பள்ளி மாணவர் உடல் கருகி பலி

19 November 2020, 11:21 pm
Quick Share

நெல்லை: நெல்லையில் இன்ஜின் மீது ஏறி மின் ஒயரை பிடித்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஜானேஸ்வரன். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவர் தந்தை இன்று காலையில் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள குடோனுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த மாணவர் ரயில் நிலையத்தில் உள்ள நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் இன்ஜின் மீது ஏறி ரயில் இன்ஜினுக்கு மேலே செல்லும் மின்சார ஒயரை கையில் பிடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இதை தொடர்ந்து திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் ரயில் நிலையத்திற்குள் இவ்வளவு பாதுகாப்பு இருந்தும் எப்படி அந்த சிறுவன் உள்ளே வந்தார். மேலும் ரயில் இன்ஜின் மீது எப்படி ஏறி மின்சார ஒயரை தொட்டார் என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுவன் செல்பி எடுப்பதற்காக ரயில் என்ஜின் மீது ஏறினார் அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0