கோவையில் ரயில் மோதி மாணவர்கள் பரிதாப பலி..! அரியர் தேர்வு எழுதச் சென்ற போது சோகம்!!

4 February 2021, 1:50 pm
Train Accident- Updatenews360
Quick Share

கோவை : கோவையில் அரியர் தேர்வு எழுதுவதற்காக வந்த கல்லூரி மாணவர்கள் இருவர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கலை சேர்ந்தவர் சிவா (வயது 22), திருவாரூரை சேர்ந்தவர் பவித்ரன் (வயது 22). இவர்கள் இருவரும் கோவை மயிலேரிபாளையம் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு ஆர்கிடெக்ட் படிப்பு படித்து வந்தனர்.

இவர்கள் பீளமேடு அருகே அறை எடுத்து தங்கியுள்ள நிலையில், கல்லூரிகள் திறக்கப்படாததால் சொந்த ஊர் திரும்பினர். இந்த நிலையில், அரியர் தேர்வு எழுதுவதற்காக கோவை வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், நேற்று இரவு சிவா மறும் பவித்ரன் மற்றும் அவரது நண்பர் ஒருவர் என மூவரும் ஹோப்ஸ் காலேஜ் ரயில்வே பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்துகொண்டிருந்த ப்ளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ் ரயில் சிவா மற்றும் பவித்ரன் மீது மோதிய விபத்தில் இருவரும் உடல் துண்டாகி உயிரிழந்தனர். அவர்களுடன் வந்திருந்த மற்றொரு மாணவர் ரயில்வே ட்ராக்கில் நடந்து செல்லாததால் உயிர் தப்பினார்.

இருகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியர் எழுத வந்த மாணவர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1

0

0