மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் அரசு பள்ளி ஆசிரியர் கைது…

Author: kavin kumar
16 December 2021, 1:03 pm
Quick Share

நீலகிரி: கோத்தகிரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கீழ் கோத்தகிரி அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு வரலாறு ஆசிரியராக முரளிதரன் (46) 2001 ம் ஆண்டில் இருந்து ஆசிரியராக பணியாற்றி கடந்த எட்டு ஆண்டுகளாக கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் வரலாறு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர்‌ பள்ளியில் பயிலும் மாணவிகளிடம்‌ ஆபசமான வார்த்தைகள் கொண்டு பேசுவதும்,தவறாக தொடுவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இது சம்மந்தமாக மாணவிகள் பள்ளியின்‌ தலைமை ஆசிரியர் (பொறுப்பு) அவர்களிடம் புகார் அளித்தனர்.இதன் பேரில் தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை மூலம் குன்னூர் டிஎஸ்பி.சசிக்குமார் விசாரணை மேற்கொண்டு இவர்‌ மீது போக்சோ 7,8,9 2012 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 289

0

0