மறைந்த காவலர் சுப்பிரமணியம் குடும்பத்திற்கு ரூ. 86.5 லட்சம் நிதி : ஐ.ஜி.முருகன் வழங்கினார்..!

31 August 2020, 3:18 pm
Quick Share

மறைந்த காவலர் சுப்பிரமணியம் குடும்பத்திற்கு ரூ. 86.5 லட்சம் நிதியை காவல்துறை சார்பாக தென் மண்டல ஐ.ஜி முருகன் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரிவைகுண்டம் அருகே கடந்த 18 ஆம் தேதி இரட்டைக் கொலை வழக்கில் பதுங்கியிருந்த ரடவுடியை பிடிக்கச் சென்றபோது, காவலர் சுப்பிரமணியம் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார்.

தமிழக காவல்துறையையே அதிர்ச்சியடைய வைத்த இந்த சம்வத்தில் குற்றவாளியும் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டார். இவரின் இழப்பு குடும்பத்தினருக்கு மட்டும் இன்றி உறவினர்கள், காவலர்கள் மற்றும் அவரது நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இறந்த சுப்பிரமணியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, இன்று மறைந்த காவலர் சுப்பிரமணியின் வீட்டிற்கு சென்ற தென்மண்டல ஐ.ஜி.முருகன் அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தென் மண்டல காவலர்கள் சார்பில் 86.5 லட்சம் ரூபாய் நிதியை காவலர்கள் சார்பாக வழங்கினார்.

Views: - 6

0

0