டெல்லியில் வெற்றிகரமாக முடிந்த சிகிச்சை.. கோவை வந்த சத்குருவுக்கு உற்சாக வரவேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2024, 5:25 pm

டெல்லியில் வெற்றிகரமாக முடிந்த சிகிச்சை.. கோகை வந்த சத்குருவுக்கு உற்சாக வரவேற்பு!!

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு கடந்த 17ஆம் தேதி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதை தொடர்ந்து மதுத்துவமனையில் பத்து நாள் சிகிச்சையில் இருந்த அவர் கடந்த 27ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.பின்னர் நான்கு நாட்கள் டெல்லியில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சத்குரு இன்று பிற்பகல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் திரண்ட ஈஷா தன்னார்வலர்கள் விவசாய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சத்குருவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் படிக்க: இதுக்குத்தான் கச்சத்தீவு திசை திருப்பும் நாடகமா? முதுகெலும்பு இல்லாத பாஜக அரசு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி!

வரவேற்பு பதாகைகளை கையில் ஏந்தி ஒரு தரப்பினரும் பெண்கள் தங்கள் கைகளில் திருவிளக்கையும் மலர் தட்டுகளையும் ஏந்தியும் வரவேற்பு அளித்த நிலையில் ஆண்களும் பெண்களும் கண்ணீர் மல்க கதறி அழுது சத்குருவை வரவேற்று ஈஷாவிற்கு வழி அனுப்பினர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!