வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் திடீர் அனுமதி : மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு அறிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2022, 12:59 pm
Stalin Admit - Updatenews360
Quick Share

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்தான் ட்விட்டர் பக்கத்தில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அனைவரும் முகக்கவசம் அணிந்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை முடிந்த பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 756

0

0