அடுத்தடுத்து உயிர்களை காவு வாங்கும் கோவை புதிய பாலம்… மேலும் ஒருவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்து சாவு… பீதியில் வாகன ஓட்டிகள்..!!

Author: Babu Lakshmanan
14 July 2022, 12:19 pm
Quick Share

கோவை – திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தில் இருந்து விழுந்து மேலும் ஒரு வாகன ஓட்டி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் திருச்சி சாலையில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம், கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் வீடியோ காணொளி மூலம் திறக்கபட்டது. இந்தப் பாலம் பயன்பாட்டுக்கு வந்த சில நாட்களிலேயே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்து சுயநினைவு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.

இதேபோல, அடுத்தடுத்த விபத்துக்களால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, விபத்துக்களை தடுக்கும் விதமாக, திருச்சி சாலையில் உள்ள புதிய பாலத்தை கோவை துணை ஆணையர் மற்றும் நெடு்சாலை துறையினர் பார்வையிட்டு முன்னெச்சரிக்கையாக பாலத்தில் மேல் வேகத்தடை அமைத்து, வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ள முன்னெச்சரிக்கையாக எச்சரிக்கை பலகைகள் மற்றும் பதாகைகள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று அரங்கேறியிருப்பது கோவை வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்த குமார் (42) என்பவர் சிங்காநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, நிகழ்ந்த விபத்தில் பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்து தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழதுள்ளார்.

பாலத்தின் மேல் வாகன ஓட்டிகள் செல்லும்போது பலத்த காற்று அடித்து இழுத்து செல்வதே விபத்து ஏற்பட காரணமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பாலம் அமைப்பதற்கான சரியான திட்டமிடல் இல்லாமல் போனதே விபத்துக்கான காரணம் என அப்பகுதியினர் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மற்றும் போக்குவரத்து புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Views: - 535

0

1