திமுக நடத்தும் விழாக்களில் மனுக்களை மக்கள் அதிகம் கொடுப்பது ஏன் தெரியுமா..? உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ரகசியம்..!!

Author: Babu Lakshmanan
14 July 2022, 11:42 am
Quick Share

திமுக விழாக்களில் பொதுமக்கள் அதிக மனு கொடுப்பதற்கு காரணம் என்ன என்று..? என்பது குறித்து திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூர் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் நூல் துறை அமைச்சர் காந்தி வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்,வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, 200 கழக முன்னோடிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கினார். மேலும், நலத்திட்ட உதவிகள் 10 ஆட்டோக்கள், மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, தையல் இயந்திரங்கள், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனங்கள் என பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது :- திமுக விழாக்களில் பொதுமக்கள் அதிகமான மனுக்களை கொடுக்கின்றனர். மனுக்களை கொடுத்தால் தங்கள் பிரச்சனைகள் தீரும் தமக்கு நல்ல காலம் பிறக்கும் என நம்புகின்றனர். அதனால் மனுக்களை அதிகமாக கொடுக்கின்றனர். அத்தகைய சிறந்த ஆட்சியை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுக தலைவர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

நான் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரை நேரில் கண்டதில்லை. ஆனால் கழக முன்னோடிகளை நான் தந்தை பெரியார் ஆகவும், அறிஞர் அண்ணாவாகவும், முத்தமிழ் அறிஞர் கலைஞராகவும் பார்க்கிறேன் என அவர் பேசினார். இவ்விழாவில் ஏராளமான திமுக தொண்டர்கள்,கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 757

0

0