கோவை தனியார் பள்ளி மாணவி திடீர் தற்கொலை : 10ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம் செய்ததால் மன உளைச்சலில் விபரீத முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2022, 5:53 pm

கோவை : பள்ளியின் பாடத்திட்டத்தால் மன உளைச்சல் அடைந்த 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தடாகம் சாலையிலுள்ள பாரதி மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி தற்கொலை செய்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

9 ம் வகுப்பு வரை மெட்ரிக் பாடத்திட்டத்தில் பயின்ற நிலையில் பத்தாம் வகுப்பில் சர்வதேச பாடத்திட்டத்திற்கு மாற்றியதால் மன உளைச்சலில் இருந்த மாணவி ரித்திகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்

துடியலூர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ள நிலையில் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

  • retro movie first day collection report ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!