“என்னோட வீடு எனக்கு வேணும்“ : திடீரென ஆட்சியர் முன் விஷம் அருந்திய பெண் மயக்கம்!!

9 November 2020, 4:41 pm
Suicide Attempt - Updatenews360
Quick Share

விழுப்புரம் : வீட்டை இடித்துவிட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் ஆட்சியர் முன்னே விஷ இலை அருந்துவிட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அவலுர்பேட்டை பகுதியை சேர்ந்த அர்ச்சனா வயது (40) தங்களது குடியிருக்கும் வீட்டை உறவினர்கள் இடித்துவிட்டது தொடர்பாக பிரச்சனை இருந்து வருவதால் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க தனது மகனுடன் வந்தார்.

மாவட்ட ஆட்சியர் வருவதற்கு முன்பாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஒட்டன் தழை என்ற விஷத்தை தின்று மயக்க நிலையில் நுழைவாயிலில் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார். அந்த நேரத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை , இதனை அறிந்து உடனடியாக அரசுக்கு சொந்தமான காரில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அங்கு பணியில் உள்ள காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

உடனடியாக அவர் அரசு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர் இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வீடு இடிப்பு தொடர்பாக பலமுறை புகார்கொடுத்தும் அவலூர்பேட்டை போலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பெண் குற்றம்சாட்டினார்.

தற்போது அந்த பெண் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி ஆட்சியர் அலுவலகத்தற்கு வரும் ஒரு சிலர், தற்கொலை செய்ய முற்படுவது வேதனையை தருகிறது, அதே போல தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கு தீர்வல்ல.

Views: - 28

0

0