குழந்தை இல்லாத விரக்தி… திருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

Author: Udhayakumar Raman
27 June 2021, 8:56 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் குழந்தை இல்லாத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி செந்தண்ணீர்புரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வந்தார். இரு வருடங்களுக்கு முன்பு வித்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இரண்டு வருடமாக குழந்தை இல்லாததால் அஜித்குமார் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித்குமார் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இது குறித்து பொன்மலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அஜித்குமாரின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 349

0

0