“என்னோட ஆதரவு அதிமுகவுக்குத்தான்“ : ரஜினி பட வில்லன் அறிவிப்பு!!

18 January 2021, 12:20 pm
Rajini Villian - Updatenews360
Quick Share

மதுரை : சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு என் முழு ஆதரவு என பிரபல வில்லன் மதுரையில் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர் சுமன், சினிமாத்துறைக்கு வந்து 43 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுமாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சுமன் கூறுகையில், சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு என் முழு ஆதரவு என்று கூறிய அவர், அதிமுகவில் சேர்வது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை என கூறினார்.

தமிழகம் பாதுகாப்புமிக்க மாநிலமாக திகழ்கிறது, அதிமுக தலைமையில் தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடைபெறுகிறது. இ.பி.எஸ் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெறும் பொழுது நாம் மற்றோரு முதல்வரை தேர்வு செய்ய வேண்டாம். ஜெயலலிதா கொண்டு வந்துள்ள திட்டங்கள் தென் இந்தியாவில் எங்கும் செயல்படுத்தவில்லை என கூறினார்.

Views: - 5

0

0