திருப்பூர் அருகே வித்தியாசமான முறையில் நடந்த சூரசம்ஹாரம் : குறைவான பக்தர்களுடன் கோலாகல கொண்டாட்டம்!!

21 November 2020, 1:39 pm
soorasamharam - Updatenews360
Quick Share

திருப்பூர் : வெள்ளகோவில் அருகே உள்ள மயில்ரங்கம் கோவிலில் குருபெயர்ச்சி மஹாயாக பெருவிழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக சூரசம்ஹார விழாவும் நடைபெற்றது. இதில் குறைவான பக்தர்கள் முகக்கவசங்களுடன் கலந்துகொண்டனர் .

காங்கேயம் வெள்ளகோவில் அருகே உள்ள மயில்ரங்கத்தில் மிகவும் சக்திவாய்ந்த 488 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ வைத்தீஸ்வரர் உடனமர் தையல்நாயகி அம்மன் கோவில் மற்றும் ஆறுமுகப்பெருமான் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது.

இக்கோவிலுக்கு தமிகம் முழுவதிலிருந்தும் கணிசமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோவில் கிபி 1532ல் விஜயநகர அரசர் கிருஷ்ணா தேவரயாராய மன்னரால் கட்டப்பட்டது.

கோவிலில் 90 கல்தூண் மண்டபம் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. இதற்க்கு சான்றாக மண்டபத்தின் மேல் பகுதியில் பல இடங்களில் மீன் சின்னம் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோவிலில் இசைத்தூண்களும் உள்ளது இந்த தூண்களில் வித்திசாயமான சத்தங்கள் வருகின்றது.

மேலும் இங்கு உள்ள முருகன் சன்னதியில் உள்ள முருகன் சிலை ஆறுமுகம் கொண்டதாகவும் 5 முகங்கள் பக்தர்கள் காணும் வகையிலும் ஒருமுகம் பின்பக்கமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவிலின் தல வரலாறு என்ன என்று ஆராய்ந்தால் வியக்கவைக்கும் வகையில் உள்ளது.

முருகப்பெருமான் அசுரனை வதம் செய்து விட்டு மயில்வாகனத்தில் திரும்பிய போது , இந்த ஊரில் மயிலில் இருந்து இறங்கி சிவனிடம் ஆசிபெற்றதால் தான் இந்த இடத்திற்கு “மயில் இரங்கம் ” என பெயர்பெற்றது.பின்னர் காலப்போக்கில் மயில் இரங்கம் என்பது பேச்சு வழக்கில் மயில்ரங்கம் என பெயர் மாறியது. இக்கோவிலில் இன்று குருபெயர்ச்சி மஹாயாக பெருவிழா நடைபெற்றது.

காலையில் துவங்கிய சிறப்பு பூஜையில் காலை 8 மணிக்கு மங்கள இசை ,குருபிராத்தனை ,கணபதி பூஜை ,புண்யாக வாசனம்,கலச ஆவாஹனம் நடைபெற்றது.9 மணிக்கு நவகிரஹ பூஜை, குருபகவான் விஷேச காயத்திரி மூலமந்திரம் ஹோமம் . 10 மணிக்கு அக்னி கார்யம்.11 மணிக்கு பூர்ணாஹீதி ,தீபாராதனை . 12 – 1 மணிக்கு குருபகவான் சிறப்பு திவ்யா அபிஷேக அலங்காரம் ,மஹாதீபாராதனை நடைபெற்றது. 1 மணிக்கு மேல் சூரசம்ஹார விழாவும் நடைபெற்றது.

இதில் சூரன் பொம்மைக்கு மாற்றாக வெள்ளை பூசணியில் சூரனைப்போல் வரைந்து 5 பூசணிகாயை முருகனிடம் இருந்து வேல் எடுத்துவந்து குருக்கள் குத்துவது போலவும் பிறகு அந்த பூசணிக்காயை தரையில் போட்டு உடைத்தனர். பிறகு அன்னதானம் நடைபெற்றது. கோவில் விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை சிறப்பாகசெய்திருந்தனர்.

Views: - 0

0

0