தமிழ் சினிமாவை உச்சத்துக்கு தூக்கி சென்ற சூர்யா : ஜெய்பீம் படத்தை பார்த்து ஆடிப்போன ஆஸ்கர்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 January 2022, 1:12 pm
Jai Bheem - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் முத்திரை பதித்தாலும் அதற்கென தனி அங்கீகாரம் கிடைக்காமல் இருந்துள்ளது. ஆதி காலம் முதல் இந்த காலம் வரை எண்ணற்ற திரைப்படங்கள் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றி வந்தது.

ஆனால் அந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கோ, படக்குழுவுக்கோ ஏதாவது ஒரு காரணத்தை காட்டி அங்கீகாரம் கிடைக்காமல் போயுள்ளது. இந்தியாவில் உள்ள பல படங்கள் பல சாதனைகளை படைத்து தனி முத்திரையும் பதித்தது.

ஆனால் உலக சினிமா வரலாற்றில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதை இதுவரை எந்த தமிழ் திரைப்படங்களும் வாங்கியதில்லை. சிவாஜி கணேசனின் தெய்வமகன், நாயகன், ஒத்த செருப்பு, விசாரணை என பல தமிழ் படங்கள் ஆஸ்கர் விருது பட்டியலில் தேர்வு செய்யப்பட்டது.

ஆனால் எந்த படத்துக்கும் விருது கிடைக்கவில்லை.. சமீபத்தில் வெளியான மண்டேலா, கூலாங்கல் படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த வரிசையில் இணைந்துள்ள படம் ஜெய்பீம்.

Jai Bhim movie review: Suriya headlines a powerful film about fighting for  the oppressed and police brutality - Hindustan Times

ஒடுக்கப்பட்ட மக்களை வழக்குகளில் சிக்க வைத்து போலீசார் வஞ்சிப்பதை எதிர்த்து போராடும் வழக்கறிஞர் என அற்புதமான காட்சிகளை அமைத்திருப்பார் இயக்குநர் ஞானவேல். படத்தில் நடித்த மணிகண்டன், லிஜிமோல் ஜோஸ் நடிப்பு பாராட்டுகளை குவித்தது.

முதல் பார்வை: ஜெய் பீம் - பெருமித சினிமா! | jai bhim movie review -  hindutamil.in

படத்திற்கு எதிராக விமர்சனங்கள் கடுமையாக எழுந்தது. ஆனால் அதையெல்லாம் துடைத்தெறிந்து ஜெய்பீம் சாதனைகளை படைத்தது. இந்த நிலையில் இந்த படத்திற்கு மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவையே திரும்ப பார்க்கவைத்துள்ளது ஜெய்பீம்.

ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இது வரை எந்த தமிழ்படமும் சாதிக்காததை ஜெய்பீம் படம் அசத்தி காட்டியுள்ளது. யூடியூப்பில் ஜெய்பீம படத்தின் சில காட்சிகளையும், படத்தின் இயக்குநர் அந்த படம் குறித்து பேசும் சில விஷயங்களை ஆஸ்கர் பகிர்ந்துள்ளது.

ஜெய்பீம் படத்தை நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு கவுரவம் கிடைத்துள்ளதாக தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்கள் அனைவரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

Views: - 1411

103

12