தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேரூரில் சுவாமி தரிசனம்

31 January 2021, 12:10 pm
Quick Share

கோவை: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை மபேரூர் கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை கோவை வந்தார்.

தொடர்ந்து, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இனு காலை சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் மருதமலை சுப்ரமணி சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்கிறார். அதன் பின்னர் மாலை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

Views: - 17

0

0