2021 ஜனவரி 15 – ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

17 August 2020, 5:09 pm
Quick Share

2021 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு, திருத்துதல் போன்ற பல்வேறு பணிகள் முனைப்புடன் தொடங்கி நடந்து வருகிறது.

இந்தநிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்றும், ஜனவரி 15-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியாகுபவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் அதற்கு வயது சான்றிதல் மிகவும் அவசியம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

WWW.nvsp.in என்ற இணைய தளம் மூலமாக பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை செய்து கொள்ளலாம் என்றும் VOTER HELP LLINE என்ற செல்லிடபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும் என்றும் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Views: - 118

0

0