நாளை மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை: நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்..!!

Author: Aarthi Sivakumar
22 August 2021, 9:03 am
TN Assembly Meeting- Updatenews360
Quick Share

சென்னை: மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது.

மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது. அன்றைய தினம் நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறுகிறது. நீா்வளத் துறை மீதான விவாதத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சோந்த உறுப்பினா்கள் பேசவுள்ளனா்.

இந்த விவாதங்களுக்கு அவை முன்னவரும், துறையின் அமைச்சருமான துரைமுருகன் பதிலளித்து புதிய அறிவிப்புகளையும் வெளியிடவுள்ளாா். இதன்பின்பு, செவ்வாய்க்கிழமை உள்ளாட்சித் துறை, புதன்கிழமை கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, வியாழக்கிழமை உயா்கல்வி, பள்ளிக் கல்வி, வெள்ளிக்கிழமை நெடுஞ்சாலைகள், கட்டடங்கள் துறை மீதான விவாதங்களும், வாக்கெடுப்பும் நடைபெறுகிறது.

சனிக்கிழமை வேளாண்மை, கால்நடை, மீன்வளம், பால்வளத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. சட்டசபை கூட்டத் தொடா் செப்டம்பா் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Views: - 306

0

0