அதிமுகவில் இணைந்த தமிழக பாஜக பிரமுகர்.!

8 August 2020, 1:32 pm
bjp Join Admk 1 - Updatenews360
Quick Share

திருப்பூர் : பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகி தனது ஆதரவாளர்களுடன் அதிமுக.,வில் இணைந்தார்.

பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் சசிகலா கதிரேசன். பல்லடம் பகுதியை சேர்ந்த இவர் தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன், அதிமுக கழக அமைப்பு செயலாளர் சிவசாமியை காளிபாளையம் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுக.,வில் தன்னை இணைத்து கொண்டார்.

முன்னதாக சசிகலா, கழக அமைப்பு செயலாளர் சிவசாமிக்கு வேல் மற்றும் முருகன் படத்தை நினைவு பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பல்லடம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். தொடர்ந்து பல்லடம் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கழக அமைப்பு செயலாளர் சிவசாமிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Views: - 36

0

0