தமிழகத்தை மிரட்டும் டெங்கு…வீடு வீடாக ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு பாதிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2023, 2:56 pm

தமிழகத்தை மிரட்டும் டெங்கு…வீடு வீடாக ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு உறுதி!

டெங்கு காய்ச்சல் அதிக காய்ச்சலையும் அதிக தலைவலியையும் தொண்டை வலியையும் வாந்தியையும் ஏற்படுத்தும். அத்துடன் சிறுநீர், வாந்தி, மலத்தில் ரத்தம் வந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும்.

டெங்கு காய்ச்சல் என்பது ஏடீஸ் எனும் ஒரு வகை கொசுக்களால் ஏற்படுகிறது. இது காலையில் மட்டுமே கடிக்கும். இந்த கொசுக்கள் நன்னீரில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். இந்த நோயின் தாக்கம் அதிகமானால் உயிரிழப்பை கூட ஏற்படுத்தும். எனவே அதீத காய்ச்சல், தொடர்ந்து 4 அல்லது 5 நாட்களுக்கு விட்டுவிட்டு காய்ச்சல் வந்தாலோ அல்லது உடலில் ஏதேனும் படை போல் இருந்தாலோ உடனே மருத்துவரை பார்க்க வேண்டும்.

அந்த வகையில் தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்சுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

இவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் அதிகரித்து வருகிறது. அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ரத்தப் பரிசோதனை மேற்கொண்டார்.

அதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. வீட்டில் இருந்தபடியே சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தற்போது உடல்நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக சொல்கிறார்கள். விரைவில் அவர் பணிக்கு திரும்புவார் என தெரிகிறது.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?