மூன்றாவது முறையாக டெல்லிக்கு செல்லும் தமிழக முதலமைச்சர் : கருணாநிதிக்காக ஸ்டாலின் எடுத்த முடிவு!!
Author: Udayachandran RadhaKrishnan18 August 2021, 11:22 am
சென்னை : முதலமைச்சரக பொறுப்பேற்ற பின் ஸ்டாலின் மூன்றாவது முறையாக அடுத்த மாதம் டெல்லி செல்கிறார்.
தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் செப்.,15ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழாவை திமுக சிறப்பாக கொண்டாட உள்ளது. இந்த விழாவுடன் திமுக தொடக்க நாள் விழா, பெரியார் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழா முடிவடைந்ததும் டெல்லியில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க முடிவு செய்துள்ளார். இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த மாதம் 16ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். 17ஆம் தேதி நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து விட்டு மறுநாள் சென்னை திரும்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0
0