“தமிழகத்தில்தான் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் அதிகம்” – முதல்வர் பழனிசாமி..!

27 August 2020, 11:13 am
Quick Share

தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் இன்று கடலூர் மாவட்டத்திற்கான ரூ.57.7 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், மக்கள் நலன் கருதி விவசாயிகள் மற்றும் சிறுகுறு தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து திட்டங்கள் நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார்.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது என கூறிய முதலமைச்சர் பழனிசாமி, இந்தியாவிலேயே அதிக அளவு கொரோனா பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம் என தெரிவித்தார்.

மேலும், கொரோனா பரவுவதை தடுக்க காய்ச்சல் முகாம் பேருதவியாக இருக்கின்றன எனவும் கடலூரில், 29 நடமாடும் மருத்துவக் குழுக்கள் உள்ளன எனவும் தெரிவித்தார்.

Views: - 0

0

0