தமிழக தேர்தல் 2021 : முக்கிய பங்கு வகிக்கும் பெண் வாக்காளர்கள்!!
20 January 2021, 12:19 pmதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு இடம் பெயர்தல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக கடந்த டிசம்பர் மாதம் முதல் தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை அமைத்து துரித நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் தமிழகத்தில் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தல் அதிகபட்சமாக சோழிங்க நல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே உள்ளனர். அதில் 3.08 கோடி ஆண் வாக்களர்களும், 3.18 கோடி பெண் வாக்காளர்களும், 7,246 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். இதே போல 18 முதல் 19வயதை சேர்ந்தவர்களில் 4.80 லட்சம் ஆண் வாக்காளர்களும், 4.16 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சென்னை துறைமுகம் தொகுதி தேர்வாகியுள்ளது, 1 லட்சத்து 76 ஆயிரத்து 272 வாக்காளர்கள் உள்ளனர். கோவை கவுண்டம்பாளயைம், மாதவரம், மதுரவாயல், ஆவடி பல்லாவரம் உள்ளிட்ட தொகுதிகளில் தலா 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளதால் ஒர அரசை தேர்ந்தெடுக்கும் முக்கிய பொறுப்பில் பெண்கள் உள்ளது சிறப்பம்சாக கருதப்படுகிறது.
0
0