“தமிழகம் இந்தியாவிற்கே முன்மாதிரியான ஆட்சியை வழங்கி வருகிறது” – கே.பி முனுசாமி பெருமிதம்..!

13 August 2020, 5:24 pm
Quick Share

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் அரசியல் வட்டாரம் மற்றும் ஊடகங்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து அதிமுகவை சேர்ந்த அமைச்சர்களும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகினறனர்.

இந்தநிலையில், இது தொடர்பாக இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளான கே.பி முனுசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், வைத்தியலிங்கம் உள்ளிட்ட சிலர் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, தமிழகத்தில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தங்களின் சிறப்பான ஆட்சியை வழங்கி வருவதாக கூறினார். அவர்களுக்கு பக்க பலமாக அமைச்சர்களும் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கொரோனா பேரிடர் காலத்தில் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, இந்தியாவிற்கே முன்மாதிரியாக உள்ளது என குறிப்பிட்டார்.

மேலும், ஆட்சி பணி குறித்தும், கட்சி பணி குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். உரிய நேரத்தில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Views: - 10

0

0