49 மூத்த சிவில் நீதிபதிகளை மாவட்ட நீதிபதிகளாக நியமித்தது தமிழக அரசு…!

21 August 2020, 9:29 am
Quick Share

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் முழுமையாக்கப்படாமல் உள்ளது. இதனால், ஏராளமான வழக்குகள் தேங்கி கிடப்பதாகவும் கூறப்படுகிறது. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் வாரியாக உள்ள நீதிமன்றங்களில் ஏராளமான பொதுநல வழக்குகள் தேங்கி கிடக்கின்றன.

இந்த சூழலில், முதன்மை சார்பு நீதிபதி, தலைமை குற்றவியல் நடுவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர், பெருநகர குற்றவியல் நடுவர், உரிமையியல் நீதிமன்ற உதவி நீதிபதி போன்ற பொறுப்புகளில் இருந்வர்களை மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் பரிந்துரை செய்திருந்தார்.

இந்தநிலையில், அவரின் பரிந்துரையை ஏற்ற தமிழக அரசு, 49 மூத்த சிவில் நீதிபதிகளை மாவட்ட நீதிபதிகளாக தற்காலிக அடிப்படையில் நியமித்து பொதுத்துறை தலைமை செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

Views: - 31

0

0