19ம் தேதி குமரி மாவட்டத்திற்கு வருகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி : பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 January 2022, 11:54 am
Kanyakumari RN Ravi - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வரும் 19ஆம் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தர் கேந்திராவில் உள்ள கட்டிடத்தை திறக்க உள்ளார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக குமரிமாவட்டம் வருகிறார். இதையொட்டி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி 19ஆம் தேதி மாலை வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார் .

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவில் ஓய்வெடுக்கிறார் .தொடர்ந்து 20ம் தேதி காலை விவேகானந்த கேந்திராவில் நடைபெறும் கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

அதன் பிறகு மதியம் கார் மூலம் தூத்துக்குடி சென்று விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை குமரி மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் தலைமையிலான போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 429

0

0