தேசிய புலனாய்வு முகமையின் சென்னை கிளைக்கு தமிழக ஐபிஎஸ் அதிகாரி நியமனம்!!

8 November 2020, 7:05 pm
NIA IPS - Updatenews360
Quick Share

என்ஐஏ-யின் சென்னை கிளை அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி தர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

என்ஐஏ என்னும் தேசிய புலனாய்வு முகமை சென்னையில் தொடங்க கடந்த செப்டம்பர் 10ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் சென்னை கிளையின் எஸ்.பியாக 2009ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி தர்மராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரியான தர்மராஜன் கியூ பிரிவு, தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி, சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையாளராக பணியாற்றி உள்ளார். ஐபிஎஸ் அதிகாரி தர்மராஜன் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.

Views: - 24

0

0