தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் பின்தங்கி உள்ளது : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!!

3 July 2021, 4:12 pm
Sellur Raju- Updatenews360
Quick Share

மதுரை : ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் மக்களை சந்திக்கலாம், அவர்களை ஏற்றுக்கொள்வது மக்களுடைய விருப்பம் என சசிகலா கட்சியினருடன் பேசி வருவது குறித்து செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவின் நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா தான் என்றும், அதிமுகவில் பொதுச்செயலாளர் மாற்றம் செய்யப்பட்ட வேண்டும் என்றால் பொதுக்குழு கூடி முடுவு எடுக்கப்படும் என்றார்.

மதுரையில் அமைச்சர் தன்னுடைய தொகுதியில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் கொரோனோ தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறார். தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் பின்தங்கி உள்ளது என குற்றம்சாட்டினார்.

தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் மதியில் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று கூறிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தங்களது ஆட்சியின் போது தடுப்பூசி மீதான நம்பிக்கையை கெடுத்தவர்கள் தற்போதையை ஆளும் கட்சியினர் தான் என்றும் விமர்சித்தார்.

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

விரைவில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் பணியினை முடிக்க உணவு துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Views: - 140

0

0