ஒரு வழியாக நாடகம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு : ஈரைப்பேனாக்கி பேனை பெருமாளாக்கும் பணி ஆரம்பம் : தங்கர்பச்சான் மீண்டும் பாய்ச்சல்

Author: Udhayakumar Raman
13 September 2021, 10:54 pm
Quick Share

சென்னை: தமிழக அரசையும், அரசுக்கு ஆதரவாக செயல்படும் ஊடகங்களையும் விமர்சித்து இயக்குநர் தங்கர்பச்சான் கருத்துக்களை கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 13ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து 14ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2021-2022ஆம் நிதி ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 23ஆம் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. விவாதங்களுக்கு துறை சாா்ந்த அமைச்சா்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனா்.

சட்டப்பேரவை 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் சட்டத்திருத்த மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்களுக்கு கூட்டத்தொடரை நடத்துவது என்று அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிப்பு, கொரோனா உள்ளிட்டவைகளால் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முன்கூட்டியே அதாவது செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவுபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக மூன்று நாள்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை திங்கள்கிழமை காலை மீண்டும் கூடியது.கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று நீட் தோவை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதா, உள்பட 20 முக்கிய சட்டத்திருத்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெற்றதும், அவையை சபாநாயகர் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டதை இயக்குநர் தங்கர்பச்சான் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-திட்டமிட்டப்படி ஒருவழியாக நாடகம் மறு தேதி குறிப்பிடப்படாமல் இன்றோடு முடிந்து விட்டது! நாடகத்தின் தொடர்ச்சி மீண்டும் அறிவிக்கப்படும் வரை ஊடகங்கள் இனி ஈரைப்பேனாக்கி பேனை பெருமாளாக்கும் அதே பணிகளைத்தொடங்கிவிடும்!!.என பதவிட்டுள்ளார்.

Views: - 283

1

0