தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை இருக்கு… ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசியமில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

8 July 2021, 1:29 pm
Sterlite Subramaniam - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் சீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் சமீபத்தில் தினந்தோறும் 3,000 பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஏன் உடனடியாக மூட வேண்டும் என்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என மருத்துவ வல்லுநர்கள் கூறப்படும் நிலையில், ஆக்சிஜனை சேமிப்பது மிக அவசியம் என்று தெரிவித்த அவர், தொற்றின் எண்ணிக்கை பூஜ்ஜியத்துக்கு வந்தபிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து யோசிக்கலாம் என்றும் தற்போது ஆக்சிஜனை சேமிக்கலாம், ஆலையை மூடவேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்தியில் புதியதாக பதவியேற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க அனுமதி கொடுத்ததும் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி குறித்து பேச டெல்லி செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

Views: - 92

0

0