‘மாரியப்பனால் இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் பெருமை’ : தமிழக பாராலிம்பிக் சங்க தலைவர் வாழ்த்து..!!!

Author: Udhayakumar Raman
31 August 2021, 11:21 pm
Quick Share

பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் மாநில தலைவர் ஆர். சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் தமிழக வீரர் மாரியப்பன் உள்பட 3 வீரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வீரருக்கு 6 முறை வாய்ப்புகள் அளிக்கப்படும் நிலையில், தொடக்கம் முதலே தமிழ்நாடு வீரர் மாரியப்பனுக்கும், அமெரிக்க வீரர் சாம் க்ரேவிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. போட்டிக்கு நடுவே மழை குறுக்கிட்ட போதும், அமெரிக்க வீரருக்கு இணையாக தமிழ்நாடு வீரர் மாரியப்பன் திறமையை வெளிப்படுத்தினார்.போட்டியின் இறுதிவரை அமெரிக்க வீரர் சாம் க்ரேவுக்கும் இடையே போட்டி நிலவியது. இறுதியில், 1.88 மீ. உயரம் தாண்டி அமெரிக்க வீரர் சாம் கிரீவ் தங்கம் வென்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டி மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.

இதையடுத்து வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோ வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் மாநில தலைவர் ஆர். சந்திரசேகர் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு எனது பாராட்டுக்கள். இச்சாதனையால் இந்தியா மட்டுமல்ல தமிழகமும் பெருமை கொள்கிறது. மாரியப்பன் தங்கவேலுவின் எதிர்கால முயற்சிகள் தொடர்ந்து சிறப்புற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.என பதிவிட்டுள்ளார்.

Views: - 153

0

0