மும்பையில் இருந்து குமரிக்கு வரும் போது புயலால் தமிழக கப்பல் ஊழியர் மாயம் : தேடும் பணி தீவிரம்!!

18 May 2021, 10:09 am
Ship Employee Missing- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி: மகளின் திருமணம் நடைபெற இருந்த நிலையில் சொந்த ஊருக்கு இருதினங்களில் வருவதாக கூறிய கப்பலில் பணிபுரிபவர் கடலில் மாயமானதால் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் பரதர் தெரு பகுதியை சேர்ந்தவர் ஹரிபால் சேவியர் (வயது 60). இவருக்கு சுபா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கப்பலில் மோட்டார் ஆபரேட்டர் ஆக பணியாற்றி வந்தார்.

இவரது மூத்த மகளின் திருமணம் இந்த மாதம் இறுதியில் நடைபெற இருந்தது. இதை முன்னிட்டு அவர் ஊருக்கு வருவதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தார். கொச்சியில் இருந்து மும்பை சென்ற கப்பலில் மங்களூரிலிருந்து முப்பது நாட்டிகல் புயல் விசியதால் கடலில் தவறி விழுந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி கடல் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் கப்பலிலிருந்து சேவியர் கடலுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை அந்த கப்பலில் இருந்தவர்கள் தேடியுள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தேடிய பிறகும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இரண்டு நாட்கள் ஆனதால் அவரை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது மகளின் திருமணத்திற்காக இன்னும் இருதினங்களில் சொந்த ஊர் வருவதாக இருந்த நிலையில் கடலில் விழுந்து மாயமான சேவியரை மத்திய மாநில அரசுகள் மீட்டுத்தர வேண்டும் என அவர்களது உறவினர்கள் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 112

0

0