தமிழகத்தில் அமலுக்கு வந்தது அன்லாக் 4.0 தளர்வுகள்..!

30 August 2020, 6:51 pm
Quick Share

தமிழகத்தில் அன்லாக் 4.0 தளர்வுகளை அறிவித்து தமிழ் நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு மழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் மாநிலவாரியாக முதலமைச்சர்கள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை ஆகியோரிடம் பிரமதர் தலைமையிலான குழு ஆலோசனை மேற்கொண்டு பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

நாளை முதல் தற்போதைய பொது முடக்கம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அடுத்ததாக பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தினார்.

மேலும் நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் அன்லாக் 4.0 ஊரடங்கு தளர்வுக்கான புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழக அரசு பொது முடக்கத்தில் தற்போது பல்வேறு கட்ட தளர்வுகளை ஏற்படுத்தி அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அவை பின்வருமாறு : –

 • மாவட்டங்களுக்கு இடையேயான இ.பாஸ் நடைமுறையை ரத்து
 • மாவட்டத்திற்குள்ளான பொது, தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதி.
 • தமிழகம் முழுவதும் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களும் திறக்கலாம்.
 • சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கு செப்-7ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 • செப்-15 ஆம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை ரத்து தொடரும் எனவும் அதன் பிறகு மாநிலத்திற்கு உள்ளே உள்ள வழித்தடங்களில் ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்படும்.
 • மதம், அரசியல் கூட்டம், பொது நிகழ்வுகளுக்கான தடை தொடரும்.
 • காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து கடைகளும் திறக்கலாம்.
 • உணவகங்கள், டீ கடைகளில் இரவு 8 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம்.
 • அரசு அலுவலகங்கள் செப்-1 ஆம் தேதி முதல் 100 சதவீத பணியாட்களுடன் இயங்கும்.
 • தங்கும் விடுதியுடன் கூடிய ஹோட்டல்கள் முழு நேரம் இயங்கலாம்.
 • வெளி மாநிலங்களில் இருந்து சென்னை விமான நிலையத்தில் 50 விமானங்கள் வரை தரையிரங்கலாம்.
 • வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்.
 • சுற்றுலாதலங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட சிறுவர்கள் கூடும் இடங்களுக்கான தடை தொடரும்.
 • பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறக்க தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0