பொங்கல் முடிந்து திரும்புவோருக்காக 16,000 பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்துத்துறை அறிவிப்பு

Author: kavin kumar
16 January 2022, 10:30 pm
Quick Share

சென்னை: பொங்கல் முடித்து ஊர் திரும்புவோருக்காக 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக 11-ம் தேதியிலிருந்து 13-ம் தேதி வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 5 லட்சத்து 74 ஆயிரத்து 316 பேர் பயணம் செய்துள்ளனர். இன்று முழு ஊரடங்கு காரணமாக ஏற்கனவே இன்றைய தேதிக்கு முன்பதிவு செய்தவர்கள் பணம் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட்டுள்ளதால், நாளை முதல் பண்டிகை முடித்து ஊர் திரும்புவோருக்காக16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 252

0

0