மீண்டும் சென்னையில் கொரோனா டபுள் செஞ்சூரி : எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
10 August 2021, 7:49 pm
Corona_Vaccination_UpdateNews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 1,893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக சராசரி பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது.

இந்த நிலையில், இன்று 1,893 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,79,130ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, கோவையில் இன்று 224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 209 பேருக்கும், செங்கல்பட்டுவில் 105 பேருக்கும், ஈரோட்டில் 169 பேருக்கும், தஞ்சையில் 97 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,367ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,930 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 24 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 242

0

0