கோவை 239.. சென்னை 162… தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகரிக்கும் கொரோனா : 19 பேர் உயிரிழப்பு

Author: Babu Lakshmanan
3 September 2021, 7:39 pm
Cbe Corona -Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றைய தினத்தை விட இன்று சற்று அதிகரித்துள்ளது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக சராசரி பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று 1,568 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,19,511ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, கோவையில் இன்று 239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் 162 பேருக்கும், செங்கல்பட்டுவில் 88 பேருக்கும், ஈரோட்டில் 125 பேருக்கும், தஞ்சையில் 108 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,980 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,657 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 68 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 312

0

0