தமிழகத்தில் 1,900க்கு கீழ் குறையாத கொரோனா : இன்றும் கோவை, ஈரோட்டில் கன்னாபின்னா பாதிப்பு..!!

Author: Babu Lakshmanan
9 August 2021, 7:46 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 2 ஆயிரத்தை நெருங்கியே உள்ளது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக சராசரி பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது. இன்றும் 2,000-ஐ நெருங்கிய பாதிப்புகளே இருந்து வருகின்றன. அதாவது, 1,928 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,77,237ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, கோவையில் இன்று 239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 189 பேருக்கும், செங்கல்பட்டுவில் 122 பேருக்கும், ஈரோட்டில் 178 பேருக்கும், தஞ்சையில் 93 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,340ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,886 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 22 ஆயிரத்து 470ஆக அதிகரித்துள்ளது.

Views: - 399

0

0