தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் எவ்வளவு? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

23 May 2020, 6:50 pm
vijayabaskar - updatenews360
Quick Share

சென்னை: உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் மிகவும் குறைவு என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக உள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 491  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 103 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது தமிழகத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  9 நாளில் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 593 பேருக்கு இதுவரை கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு விமானம் மூலம் தமிழகம் வந்தவர்களில் 62 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இந் நிலையில், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில் கூறி இருப்பதாவது:

கொரோனா பாதிப்பில் இருந்து உயர் அழுத்தம், இருதய நோய் போன்றவை உள்ளவர்களும் குணம் பெற்றுள்ளனர். கொரோனா இறப்பு விகிதம் உலகளவில் ஒப்பிடும்பொழுது, தமிழகத்தில் மிகவும் குறைவு என்று கூறினார்.

Leave a Reply