தமிழகத்தில் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு… எவை இயங்கும்… எவையெவை இயங்காது… தெரியுமா..?

8 May 2021, 9:45 am
Lockdown_Tamilnadu
Quick Share

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வரும் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 26 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு வரும் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கட்டுப்பாடுகளின் முழு விபரம்

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும ரயில்களில் வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்

மளிகை, காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி

அழகுநிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்க தடை

நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சி குழுமங்கள் செயல்பட அனுமதியில்லை

மாவட்டம் – மாவட்டம் தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்சி, ஆட்டோக்கள் இயக்கத் தடை

திருமணம், துக்க நிகழ்வு, நேர்முகத் தேர்வு வேலைவாய்ப்பு, மருத்துவமனைகளுக்கு உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி

முழுஊரடங்கின் போது உணவு விநியோகம், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை விநியோகம் செய்யும் ஆன்லைன் நிறுவனங்களின் சேவைகளுக்கு அனுமதி

பால்விநியோகம், சரக்கு வாகனங்கள், விளைபொருட்கள் மற்றும் எரிபொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி

டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிப்பு

ரயில், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து தொடர்பான தொழிலாளர்கள் சென்று வர அனுமதி

பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி

வங்கிகள், ஏடிஎம், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீட்டு நிறுவன சேவைகள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி

தனியார் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் இயங்க தடை – விதிவிலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகளும் இயங்க தடை

வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட தடை – குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதி

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல தடை

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலை., மற்றும் அரசு, தனியார் பயிற்சி நிறுவனங்கள் இயங்க அனுமதியில்லை

அம்மா உணவகம் தொடர்ந்து இயங்கும்

காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல்ர 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி

நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செயல்படும்

உணவகங்கள் ஏற்கனவே அறிவித்த நேரங்களில் மட்டும் பார்சல் உணவுகளை மட்டும வழங்க அனுமதி

நீதிமன்றங்கள், ஊடகம் மற்றும் பத்திரிக்கை துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்

திருமண நிகழ்ச்சியில் 50 பேரும், துக்க நிகழ்வுகளில் 20 பேரும் பங்கேற்கலாம்

Views: - 178

0

0