இளைஞர்களை கவர்ந்திழுத்த பண்பாளர்.. தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு ஆளுநர் வாழ்த்து…!!

Author: Babu Lakshmanan
25 October 2021, 2:30 pm
rajini - rn ravi - - updatenews360
Quick Share

சென்னை ; நாட்டின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஆளுநர் ஆர்என் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கலைத்துறையில் சிறந்த பங்காற்றியதற்காக திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த்துக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினரான லதா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த்திற்கு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :- அன்பிற்கினிய திரு. ரஜினிகாந்த்‌ அவர்களே, இந்திய திரைத்துறையில்‌ தங்களின்‌ அளப்பரிய பங்களிப்பிற்காக. இந்திய திரைப்பட உலகின்‌ மிக உயரிய விருதான மற்றும்‌ வெகு இலருக்கே கிடைக்கப்பெற்ற அங்கீகாரமான தாதா சாகேப்‌ பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்களின்‌ சார்பாகவும்‌, என்‌ சார்பாகவும்‌ வாழ்த்துக்களை தெரிவித்துக்‌ கொள்கிறேன்.‌ இந்நாள்‌ திரைப்படங்களை விரும்பும்‌ அனைவருக்கும்‌ மகிழ்ச்சியளிக்கக்கூடியதொரு பொன்னாளாகும்‌.

இந்தியத்‌ திரை உலகற்கான தங்களின்‌ வியத்தகு பங்களிப்புடன்‌ பொது வாழ்க்கையிலும்‌ தனிப்பட்ட வாழ்விலும்‌ தங்களின்‌ தலைசிறந்த பண்பினால்‌ நம்‌ நாட்டு இளைஞர்களை கவர்ந்திழுத்த பண்பாளர்‌ நீங்கள்‌ நீங்கள்‌ நல்ல உடல்நலத்தோடு ஆண்டுகள்‌ பல நீடூடி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 402

0

0