இதென்னடா, மதுரைக்காரனால் வந்த சோதனை… கழிவறையில் தோனியின் புகைப்படம்… கொந்தளிக்கும் ரசிகர்கள்…!!

Author: Babu Lakshmanan
13 June 2022, 2:26 pm
Quick Share

மதுரையில் பேருந்து நிலைய கழிவறையில் தோனியின் புகைப்படத்தை வைத்தது அவரது ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவிழா, கல்யாணம் முதல் இறுதிச் சடங்கு வரை என அனைத்து விஷயங்களுக்குமே பேனர் வைப்பது மதுரை மக்களின் கலாச்சாரமாகும். கடந்த சில நாட்களாக விஜய், அஜித் மற்றும் ரஜினி ஆகியோரை வைத்து அரசியல் பேனர்கள் வைத்து அமர்க்களப்படுத்தினர்.

இந்த நிலையில், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனியின் புகைப்படத்தை கழிவறை ஒன்றில் விளம்பர மாடலாக வைக்கப்பட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

பூஷ்ட், பெயின்ட், டிவிஎஸ் என உலகளவிலான பிராண்டுகளின் விளம்பரத்தில் நடித்து எப்போதும் டிரெண்டாகி வரும் தோனியின் புகைப்படத்தை, கழிவறையில் உள்ளூர் மாடலாக வைத்திருப்பது அவரது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தோனியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மதுரை மாநகராட்சிதான் இதற்கு முக்கிய காரணம் என்றும், உடனடியாக தோனியின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை தமுக்கம் மைதானம் அருகே உள்ள இராஜாஜி சிறுவர் பூங்கா முன்பு நாய் காதல் செய்யாதீர்கள் என்று காதலர்களை கொச்சைப்படுத்தும் பேனர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 599

0

0