நார் நாராக வரும் தார் சாலை.. கையோடு பெயர்ந்து வரும் புதிய ரோடு : பணிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan10 January 2022, 1:42 pm
கன்னியாகுமரி : தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த சாலைகளில் செப்பனிடும் பணி துவங்கியுள்ள நிலையில் பெயரளவுக்கு பெயர்ந்தெடுக்கும் சாலைகளை போடுவதாக சாலைப்பணியை பொதுமக்கள் தடுத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையை செப்பனிடாத நிலையில் குண்டும் குழியுமாக காட்சி அளித்து தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சாலையை செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சேதமடைந்த பகுதிகளில் தார் போடும் பணியை பொதுப்பணித்துறை துவங்கி உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலானதால், ஊரடங்கை காரணம் காட்டி திருத்துவபுரம் பகுதியில் ஏனோ தானோ என தார் போடும் பணி நடைபெற்று வந்துள்ளது.
இந்தநிலையில் தரமற்ற முறையில் தார் போடுவதாக கூறி சாலை பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தார் சரியான கலவை இன்றியும் குண்டும் குழியையும் சரி செய்யாமல் இளகும் தாரை எடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சி மாறியதும் சாலை பணிகளுக்கு டெண்டர் மாற்றிவிடப்பட்டுள்ளது. இந்த மாதிரி சாலைகளை போட்ட கான்ட்ராக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யாமல் பெயரளவுக்கு பெயர்ந்தெடுக்கும் தார் சாலை போடும் பணியை செப்பனிடக்கோரியும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
0