கோவை கீரணத்தம் ஐடி ஊழியர்களை குறி வைக்கும் மர்ம உருவம்.. அலற விட்ட சிசிடிவி காட்சி!
Author: Udayachandran RadhaKrishnan16 May 2025, 2:05 pm
கோவை சரவணம்பட்டி கீர நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஐ.டி நிறுவனங்கள் அங்கு உள்ளன. வெளியூர்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பணி புரிந்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது உறுதி.. பாஜக கூட்டணி வலிமையாக உள்ளது : அண்ணாமலை கருத்து!
இந்த நிலையில் கீரநத்தம் பகுதியில் உள்ள இளைஞர்கள் தங்கும் விடுதியில் இன்று காலை 3 மணிக்கு மர்ம நபர் ஒருவர் முகத்தை கர்ச்சீப் மறைத்துக் கொண்டு ஒவ்வொரு அறைக்கும் சென்று கதவை திறந்து பார்த்து நோட்டமிட்டு, பின்னர் அந்த அறைகளில் இருந்து 13 மொபைல் மற்றும் ஒரு லேப்டாப் திருடி சென்று உள்ளார்.
அதன் சி.சி.டி.வி காட்சிகள் தற்பொழுது வெளியாகி தனியாக தங்கி இருக்கும் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அதே போல இன்று காலை மட்டும் மூன்று தங்கும் விடுதியில் திருட்டுப் போனதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
தனியாக அறை எடுத்து தங்கி இருக்கும் ஐ.டி ஊழியர்கள் குறி வைத்து செல்போன், லேப்டாப் திருடி செல்லும் மர்ம நபர்
— UpdateNews360Tamil (@updatenewstamil) May 16, 2025
கைக்குட்டையை வைத்து முகத்தை மறைத்து செல்லும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்.#Trending | #coimbatore | #tnpolice | #thief | #viralvideo | #updatenews360 pic.twitter.com/EcaFfa57xB
மேலும் இந்த விடுதியில் காவலர்கள் எதுவும் இல்லாததாலும், அதே போல காவல் துறையினர் அப்பகுதிகளில் ரோந்து பணி செய்யாமல் இருந்ததால், இது போன்ற திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக அப்பகுதியில் தனியாக அறைகள் மற்றும் வாடகை வீடுகள் தங்கி இருக்கும் மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்சி வருகின்றனர்.
