குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் பிரச்சனை: கோவையில் தாசில்தாரின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை…போலீசார் விசாரணை!!

Author: Rajesh
25 January 2022, 11:26 am
Quick Share

கோவை: தாசில்தாரின் கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசரணை மேற்கொண்டுள்ளனர்.

கவுண்டம்பாளையத்தை அடுத்த பாலன் நகரை சேர்ந்தவர் சபரீசன்(59). இவரது மனைவி சர்மிளா. சர்மிளா பேரூர் தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். சபரீசன் பணிக்கு செல்லாமல் இருப்பதாகவும் குடிபழக்கம் அதிகம் உள்ளவர் என்றும் கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி குடும்பதத்தில் தகராறு ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று அவர் அவரது இல்லத்தில் கேபிள் வையர் மூலம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து துடியலூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சபரீசனுக்கு அதிக குடிபழக்கம் இருக்கின்ற காரணமாக இல்லத்தில் ஏற்படும் தகராறில் மன உளைச்சலில் இருந்ததாகவும் சில மாதங்களுக்கு முன் குடிப்பழக்கத்தை நிறுத்த சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

Views: - 384

0

0