தாசில்தார் வீட்டில் சோதனை நிறைவு: ஆவணங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

Author: Udhayakumar Raman
30 November 2021, 11:04 pm
Quick Share

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் தாசில்தார் வீட்டில் சோதனை நிறைவுடைந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவில், சாரதி நகர் 2ம் தெருவில் உள்ள திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் துணை ஆட்சியர் பணியாற்றி வருபவர் பவானி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்தாக எழுந்த புகாரின் அடிப்படையில்
இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் 7பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவருக்கு சொந்தமான திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள வாளாடி பெட்ரோல் நிலையம் மற்றும் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் சாலையில் உள்ள SVR மேல்நிலைப் பள்ளியில், அரியலூர் மாவட்டம் டால்மியாபுரம் உள்ள அலுமினிய தொழிற்சாலையிலும் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். காலைமுதல் நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது. சோதனையின் முடிவில் அவரது வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

Views: - 238

0

0